in

திருத்துறைப்பூண்டியில் வழக்கறிஞர் சங்கத்தினர் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் வழக்கறிஞர் சங்கத்தினர் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் பிரதான கோரிக்கையாக இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி புதிய சட்டங்களாக தாக்கல் செய்துள்ளவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர் அருள்செல்வன் தலைமையில் சட்ட நகலை எரித்து ஒன்றிய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் 500 மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் அருகே அரசவனங்காட்டில் தனியார் பஸ் மோதி ஒருவர் பலி