மருதுபாண்டியர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முப்பதாம் தேதி தேவர் குருபூஜை அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதில் தென் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்பார்.
இந்நிலையில் தற்போது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள
ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223- வது குருபூஜை விழா கடந்த 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்துள்ளார்.
எடப்பாடி உடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் , கடம்பூர்ராஜூ
தெப்பக்குள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரையில் 5000க்கும் அதிகமான காவல் தறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டு சென்றார்.