இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் தலைவர் பி.ஜேசுராஜா
இந்திய இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற இந்திய – இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசி மகிழ்ந்தோம். அவர்களுடைய கஸ்ர நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய கஸ்ர நிலமைகளையும் நாங்கள் கூறினோம்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெற ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சம்மதத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
கடந்த 9 வருடங்களுக்கு முன் இரண்டு அரசாங்கங்களும் பேசிய பின் மீனவர் பிரச்சனை பேசப்படவில்லை. 9 வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுவலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
நாங்கள் இந்த இழுவலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக் கூறினோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்று திரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் உதவியுடன் இதனை பேசி நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும் என பேசியுள்ளோம்.