பெண்களை காப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
பெண்களை காப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்கிற விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களை காப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்கிற விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
இப்பேரணிக்கு சமூக நலத்துறை அதிகாரி சுகிர்தா தேவி தலைமை வகித்தார் பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து துவக்கி வைத்தார் பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காளி ஆட்டம் முன்னே செல்ல இருசக்கர வாகனத்தில் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பெண்கள் ஆர்வத்துடன் வந்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.