கடன், பகை, நோய் போன்ற எதுவும் இல்லாத வாழ்க்கையே ஆனந்தம்… சாமானியன் குறித்து இயக்குனர் ராஜேஷ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராமராஜன் கதாநாயகனாக தோன்றும் படம் ‘சாமானியன்’.
மதியழகன் தயாரிப்பில் ஆர் ராகேஷ் கதை வசனத்தில் வழக்கறிஞர் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவர்களுடன் ராதாரவி, கே எஸ் ரவிkumar, எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, ஸ்மூத்தி வெங்கட், அபர்ணா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோ நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாகும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், கிராமத்து கலைங்கரான ராமராஜன் 12 ஆண்டுகள் கழித்து சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார்.
2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரையில் தோன்றாத ராமராஜனின் சாமானியம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலில் இருக்கின்றனர்.
கடன், பகை, நோய் போன்ற எதுவும் இல்லாத வாழ்க்கையே ஆனந்தமான சந்தோஷம் நிறைந்த சிறந்த வாழ்க்கை என்ற கருத்தை உணர்த்தும் கதை தான் சாமானியன்.
ஒரு மனிதனுக்கு இருக்க இடமும் உண்ண உணவும் தேவை அந்த தேவைக்காக தன் வாழ்க்கையில் எவ்வாறு போராடுகிறான் என்பதை ஆழமாக சொல்லி இருக்கிறேன்.
சாமானியன் படதில் ராமராஜனை தவிர வேறு யாரையும் என்னால் கதாநாயகனாக நினைத்துப் பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு தனது முழு ஒத்துழைப்பையும் கடின முயற்சியும் கொடுத்திருக்கிறார்.
அதிரடி ஆக்சன் எமோஷனல் போன்ற சீன்களில் அந்த காலத்தில் நான் பார்த்த ராமராஜனையே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். மேலும் இந்த படம் ஒரு குடும்ப படமாகவும் அமைந்திருக்கிறது.
இளையராஜா இப்படத்திற்கு பாடல்கள் எழுதி இசை அமைத்து பாடியிருக்கிறார். ராமராஜன் படங்களுக்கு தனது இசை மூலம் பல வெற்றிகளை கொடுத்தவர் இளையராஜா.
இப்படத்திலும் ராமராஜனுக்கு வெற்றியை கொடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த படமாக சாமானியன் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விரைவில் வெளிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார் இயக்குனர் ராஜேஷ்.