காலை முதல் லேசான மழை புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல்
புதுச்சேரியில் காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…
புதுச்சேரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாகவே வெயில் காணப்பட்டது. தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
மேலும் விவசாயிகள் விளைவிக்கப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு வந்த நிலையில் தற்போது பெய்து வரும் லேசான மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
தொடர்ந்து காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் வேலைக்கு சென்றவர்கள் பலர் மழையில் நனைந்தபடியும் குடைகளை பிடித்த படியும் சென்றனர். இதனால் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருவதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை காரணமாக கடல் அலைகள் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுமரத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டும் என்று புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரித்து உள்ளது.