in

திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக லேசான முதல் கனமழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக லேசான முதல் கனமழை வரை பெய்து வருகிறது

இந்நிலையில் திருச்சி மாநகர் பகுதியில் இன்று விடிய விடிய பெய்த மழை காரணமாக ராமச்சந்திர நகர் கிராபட்டி, எடமலை பட்டி புதூர்,உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கையை பாதிக்க வைத்தது

ராமச்சந்திர நகர் அருகே உள்ள 300 ஏற்பட்ட வீடுகளில் ஹெல்த் காலனி ஹெல்த் காலனி எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை நீர் சூழ்ந்துள்ளது

மேலும் அந்தப் பகுதி மக்கள் கூறுகயில்..

மழைநீர் வடிகால் பாதையை அவ்வப்போது சுத்தம் செய்து இருந்தால் இது போன்ற நிலைமை ஏற்பட்டு இருந்திருக்காது எனவும்,வருடம் தோறும் இது போன்ற மழைநீர் தொல்லையால் நாங்கள் பெரும் அவதி அடைகின்றோம், மழை நேரத்தில் மட்டும் அதிகாரிகள் வந்து பார்த்து செல்கின்றனர் ஆனால் இந்த முறை சாலையிலேயே நின்று சென்று விட்டனர் மேலும் எங்களுக்கு இந்த மழை நீரால் அதிகளவு கொசு தொல்லை மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் பூகும் நிலைமை ஏற்பட்டுள்ளது என வருத்தத்துடன் தெரிவித்தனர்

மேலும் ஒரு வயதான பெண்மணி தனது குளிர் நடுக்கத்துடன் வீட்டில் தேங்கி இருந்த மழை நீரை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு வெளியேற்றிய காட்சி மனதை வேதனைய செய்தது

What do you think?

இது ஒரு பாடம் எல்லோருக்கும்

கழிவுநீர் கால்வாயுடன் மழை சேர்ந்து வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதி