இந்தியாவில் உள்ள குடிமக்களின் வாழ்வாதாரம் 10 வருடங்களாக சவக்குழிக்குள் சென்று விட்டது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய வாசுகி கடந்த 10 வருடங்களாக இந்திய மக்களின் வாழ்வாதாரம் சவக்குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக கூறினார்.
பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான அரசு எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றும் ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருகிறோம் என்று கூறிய நிலையில் கடந்த 10 வருடங்களில் 20 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் அடிப்படையில் சில லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் மோடி அரசு புதிதாக வேலை வாய்ப்பு உருவாக்க விட்டாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தை நிரப்பினாலே இளைஞர்களுக்கு அது போதுமானதாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் பேசுகையில் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கூட முறையாக செயல்படுத்தாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் சம்பள தொகை நான்கு மாதம் வரை நிலுவையில் இருப்பதாகவும் இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு அல்ல மத்தியில் ஆளக்கூடிய மோடி தலைமையிலான அரசு என்றும் இத்திட்டத்திற்கான உரிய நீதி ஒதுக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.