தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா. மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று 753 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 40 கோடியே 77 இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவிகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் 753 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 40 கோடியே 77 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் மற்றும் மாவட்ட அளவில் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிக்கடன் வழங்கிய சிறந்த வங்கிகளான 7 வங்கிகளுக்கு கேடயம், நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.