in

புதுச்சேரி மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான உள்ளூர் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

புதுச்சேரி மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான உள்ளூர் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் என 39-நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொது விடுமுறையானது 4 பிராந்தியங்களிலும் அறிவிக்கப்படும். மேலும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, மற்றும் ஏனாம் பிராந்தியம் என தனித்தனியாகவும் விடுமுறைகள் உள்ளூர் திருவிழாக்களுக்காக
அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி புதுச்சேரி மாநில அளவில் வரும் 2025 ஆம் ஆண்டில் புத்தாண்டு தினம், பொங்கல், திருவள்ளுவர் தினம் என ஜனவரியில் 3 நாட்களும், மார்ச்சில் ரம்ஜான், ஏப்ரலில் வங்கிக்கணக்கு நிறைவு, தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என 3 நாட்களும், மே மாதத்தில் மேதினத்துக்கும், ஜூனில் பக்ரீத் பண்டிகைக்கும், ஆகஸ்டில் சுதந்திர தினம், டி ஜூர் டிரான்ஸ்பெர் தினம், விநாயகர் சதுர்த்தி என 3 நாட்களும், செப்டம்பரில் மிலாது நபி, அக்டோபரில் சரஸ்வதி பூஜை, காந்திஜயந்தி, தீபாவளி என 3 நாட்களும், நவம்பரில் புதுச்சேரி விடுதலை நாள், டிசம்பரில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 18 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மாஹே பிராந்தியத்தில் பொது விடுமுறை நாட்களுடன் ஏப்ரலில் விஜூ விடுமுறை 2 நாட்கள், செப்டம்பரில் ஓணம்,அக்டோபர் மகா நவமி, தெரசா பிறந்தநாள் என 5 நாட்கள் உள்ளூர் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏனம் பிராந்தியத்தில் பொது விடுமுறைகளுடன் அம்பேத்கர் பிறந்தநாள் உள்ளிட்டவையும் விடுமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

அத்துடன் அனைத்துப் பிராந்தியங்களிலும் குறிப்பிட்ட முக்கிய திருவிழா நாட்களையும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களாக கூறப்பட்டுள்ளன. அதன்படி மொத்தமாக 2025-ஆம் ஆண்டில் 39-நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

What do you think?

தனுஷ்- நயன்தாரா மோதல் என்பது இந்தியா கிரிக்கெட் மேட்ச் போன்று இன்ட்ரஸ்டா இருக்கு

எந்தெந்த மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27.11.2024 ) விடுமுறை?