வட்டார போக்குவரத்து பணியாற்றும் ஊழியர்கள் காலியான பணியிடங்களை நிரப்ப வலியுறுதல்
தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
அதன் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது தமிழகம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் அதில் 3000 மேற்பட்ட அமைச்சு பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
தற்போது இதில் 1200க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளது இதனால் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கணினி மூலம் பணியாற்றி வந்தாலும் கணினி மென்பொருளில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இதனை உயர் பொறுப்பில் உள்ள ஆணையாளர் காது கொடுத்து கேட்பதில்லை.
இதனை பலமுறை போக்குவரத்து ஆணையாளரிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் மென்பொருளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களைய வேண்டியும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் வரும் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் கருப்பு ஆடை அணிந்து பணி செய்வது என தீர்மானித்துள்ளோம்.
எங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக முதற்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
இதன் பிறகாவது அரசு பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.