முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் வட்டமிட்டு சுற்றிய கருடபகவான்
நன்னிலம் அருகே பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கும்பாபிஷேக விழாவில் வட்டமிட்டு சுற்றிய கருடபகவான் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. திருமணம் ஆகாமல் இருந்தால் இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும், அதே போன்ற தீராத நோயினால் பாதிக்கப்பட்டால் இந்த கோவிலுக்கு வந்து வேப்பிலையை மாலை கட்டி மாரியம்மன் சாமிக்கு செலுத்தினால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகம். இவ்வாறு சிறப்புமிக்க மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழாவிற்கான கோவில் புரணமைக்கும் பணி நடைபெற்று கடந்த வாரம் முடியுற்ற நிலையில்.
கடந்த 24ஆம் தேதி விநாயகர் ஹோமத்துடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு கால யாக பூஜை இன்றுடன் முடிவடைந்த நிலையில் மகா பூர்ணாகிதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாலத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து, கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடபகவான் கோவிலை சுற்றி வலம் வந்தது. இதனை பக்தர்கள் வணங்கி தரிசித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.