கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா கண்டருளிய ராமசுவாமி . திரளான பக்தா்கள் தாிசனம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ராம சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாசி திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை தோளுக்கிணியானில் புறப்பாடு பின்னா் திருமஞ்சனம் கோஷ்டி இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். விழாவின் ஐந்தாம் திருவிழாவான இன்று இரவில் சுவாமி ராமபிரான் கருட வாகனத்தில் ஆஞ்சநேயருக்கு எதிர் சேவை புரியும் காட்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதற்காக மாலையில் சாயரட்சை பூஜைகள் முடிவடைந்ததும் ஸ்ரீராமரை கருடவாகனத்தில் ஏழுச்தருளச்செய்து சிறப்பு அலங்காரம் செய்தனா்.
சுவாமிக்கு நேர் எதிரே ஆஞ்சநேயா் கை கூப்பியபடி இருக்க சுவாமி மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் பாளையங்கோட்டை ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 19 ம் தேதி நடைபெறுகிறது.