in

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வெள்ளி கவசத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வெள்ளி கவசத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான்

 

காரைக்கால் மாவட்டத்தில்தொடர் விடுமுறை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: அதிகாலை நீராடி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்: பக்தர்களுக்கு வெள்ளி கவசத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பாலித்து வருகிறார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான ஆலயத்தில் அனுகிரக மூர்த்தியாக தனி சன்னதியில் வீற்றிருக்கும் இருக்கும் ஸ்ரீசனிபகவானை தரிசனம் செய்ய வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதாலும் மேலும் திருக்கணித பஞ்சாங்க முறை படி சனிப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சனீஸ்வர பகவானை வழிபட தமிழக பகுதியில் மயிலாடு துறை, திருவாரூர், சிதம்பரம், பெங்களூர், உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளிமாநிலத்தில் இருந்து கேரளா ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

ஆனால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்க முறையை பின்பற்றி சனிப்பெயர்ச்சி விழா 2026ம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் சனி பகவானை தரிசனம் செய்ய இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வந்தனர்.

மேலும் தினம் படி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சனிபகவானுக்கு உகந்த எள் தீபமேற்றி வழிபட்டனர்.

தொடர் விடுமுறையால் சனி பகவானை தரிசிக்க அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் நூற்றுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

100 நாள் வேலை திட்ட நிதியான ரூபாய் 4034 கோடியை வழங்காத மத்தியரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா