விநாயகரை தன் ஒளிக்கதிரால் அபிஷேகம் செய்த சூாிய பகவான்
அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயிலில் சூரியதாிசனம். விநாயகரை தன் ஒளிக்கதிரால் அபிஷேகம் செய்த சூாியபகவான். திரளான பக்தா்கள் தாிசனம்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயில் ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும்.
இங்கு விநாயகப்பெருமான் தன்னுடைய 32 தோற்றங்களில் 8 வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட விநாயகராக நான்கு கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் ஸ்ரீநீலவாணிஅம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.
இவ் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரியன் தன் ஒளிக்கதிா்களால் விநாயகரரை அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது. இன்று ஸ்ரீவிஸ்வாவசு வருட தமிழ்புத்தாண்டாடு பிறந்தது. இதைஒட்டி காலை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஜ்வரூபம் காலை சந்தி நடைபெற்றன.
தொடா்நது கலசங்கள் கொண்டு கணபதிஹோமம் நடைபெற்றது. மூலவருக்கு மஞ்சள்,மா,பால்,தயிா், பஞ்சாமிருதம்,விபூதி,சந்தணம் போன்ற 16 வகை திரவியங்கள்கொண்டு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.
இதனை தொடா்ந்து காலை 6.20க்கு சூாிய ஒளியானது இராஜகோபுரம் வழியாக மூலஸ்தானத்தில் அமா்ந்துள்ள விநாயகப்பெருமான் மீது விழுந்தது. விநாயகரை தன் ஒளிக்கதிரால் அபிஷேகம் செய்யும் சூாியதாிசனத்தை ஏராளமான பக்தா்கள் கண்டு மகிழந்து தாிசனம் செய்தனா்.
அதனை தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டடது. 3 தினங்கள் சூாிய ஒளி விழுவதை முன்னிட்டு திருக்கோயிலில் லட்சாா்ச்சனை திருவிளக்குபூஜை புஷ்பாஞ்சலி நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை பக்தா்கள் உபயதாரா்கள் மற்றும் இந்துசமயஅறநிலையத்துறையினா் செய்துள்ளனா்.