மனைவிடம் தோற்றுப் போங்கள் …நடிகை ரோஜா அட்வைஸ்
செம்பருத்தி படத்தின் கதாநாயகியாக இயக்குனர் ஆர் கே செல்வமணியால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
நடிகை ரோஜா பின்னாலில் அவரேயே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
ஆர் கே செல்வமணி. நடிகை ரோஜா ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கட்சியின் MLA…வாகவும், அக்கட்சியின் அமைச்சராகவும்’ இருந்தவர், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தனது கணவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நான் வீட்டில் இருக்கும் போது எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன் ஆனால் எனது கணவர் செல்வமணி சண்டை போட மாட்டார், அதையும் மீறி அவருக்கு கோபம் வந்தால் அவருடைய அறை கதவைத் பூட்டி கொண்டு அமைதியாக இருப்பார்.
ஏனென்றால் அவரால் என்னை திட்ட முடியாது திட்டினால் நான் அழுவேன் அதன் பிறகு அவரால் என்னை சமாந்தப்படுத்த முடியாது என்று கூறி ரோஜா ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் தோற்றுப் போங்கள் அவரிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.