காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும்… எல்லோரும் காதலியுங்கள் நடிகர் சித்தார்த் அட்வைஸ்
நடிகர் சித்தார்த் தனது Insta பக்கத்தில் எல்லோரும் காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற பதிவுடன் ஒரு வீடியோவை வெளியிட்டு அட்வைஸ் என்ற பெயரில் இளைய தலைமுறைகளை உசுப்பேத்தியதோடு இல்லாமல்.. அந்த வீடியோவில் அவர் தனது செல்ல நாய் குட்டிக்கு முத்தம் கொடுக்கும்படி காட்சிகள் இருக்கின்றது.
மேலும் அந்த பதிவில் அவர் கூறியதாவது, “காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும், காதல் உங்களுக்கு உதவியாக இருக்கும், வாழ்வதற்காக காதல் செய்யவும் வாழ்க்கையில் காதல் தான் எல்லாமே” என்று ஒரே காதல் போதனையாக போதித்திருக்கிறார்.
இந்த வீடியோவில் அவரின் இந்த பதிவிற்கு கௌதம் கார்த்திக் உட்பட பல ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து லைக் போட்டு தள்ளுகிறார்கள், சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சித்தா நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றது.
தற்பொழுது இவர் கமலஹாசனுடன் ‘இந்தியன் 2‘ வில் நடித்திருக்கிறார்.
மேலும் சமிப காலமாக சித்தார்த்துக்கும் அதிதீராவுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசு கிசுகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்கிறார்களாம் அடிக்கடி இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள்.
விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணம் ஆவது Success ஆகட்டும் சித்தார் சார் வாழ்த்துகள். அன்பானவர்களே தயவு செய்து என் பேரில் யாரையும் ஏமாற்றாதீர்கள்… கெஞ்சுகிறது காதல்.