வரதட்சணை கொடுத்து நடிகை ரம்யா பாண்டியனை… திருமணம் செய்த லவ்ல் தவான்
நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலரான லவ்ல் தவோனை மணந்தற்கு வரதட்சணை எதுவும் கொடுக்காமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் உள்ள கங்கைக் கரையில் யோகா மாஸ்டர் லவ்ல் தவானை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ மணந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், ரம்யா பாண்டியனின் கணவர் லவ்ல் தவான் வரதட்சணை கொடுத்து ரம்யாவை திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது லவல் தவான் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் வழக்கப்படி பெண்கள் வீட்டில் வரதட்சணை வாங்குவதில்லை மாப்பிள்ளை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதனால் லவ்ல் தவான் பெரும் தொகை வரதட்சணை கொடுத்து ரம்யா பாண்டியனை திருமணம் செய்தார்.
அதுமட்டுமின்றி நகை முதல் திருமண செலவு வரை அனைத்தையும் தவானே ஏற்றுகொண்டாராம். இந்தத் தகவலை ரம்யாவின் தாயார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள், ரம்யா பாண்டியன் கொடுத்து வைத்தவர் என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.