in

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆய்வு…


Watch – YouTube Click

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆய்வு…

 

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் கழிவறைகள் மூலமாக விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர் மேலும் 8-க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விஷவாயு தாக்கப்பட்ட புதுநகர் பகுதியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் வீடு வீடாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்து அதிகாரிகளை விஷவாயு பரவிவதற்கான காரணங்கள் குறித்தும் தற்போது எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அப்பொழுது அந்த பகுதி மக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டு தினம் பயந்து பயந்து இருப்பதாகவும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறினர்.

இதனை கேட்டுக் கொண்ட ஆளுநர் முதலில் தற்போது நடந்துள்ள சம்பவம் போன்று இனிமேல் நடக்காத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டு விஷவாயு கசிவுக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன்…. புதுநகர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே விஷவாயு பரவி இருக்கிறது இதனால் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சுத்திகரிப்பு நிலையத்தில் வீடு கழிவுகள் மட்டும் இல்லாமல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன் தற்போது புதுச்சேரியில் உள்ள அதிகாரிகளை வைத்து புதுநகர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது தேவைப்படும் பட்சத்தில் பொருள் செலவு பொருட்படுத்தாமல் வெளி மாநிலத்திலிருந்து நிபுணர் குழுவை வரவழைத்து இந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி முழுவதும் உள்ள சுத்திகரிப்பு மையங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும் என்ற குறிப்பிட்ட அவர் இன்று மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்று துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை பயப்பட தேவையில்லை ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது தேவைப்படும் பட்சத்தில் அங்கே சிகிச்சையையும் மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

புது சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா

விஷவாயு குறித்து செய்தியாளர்களை சந்தித்து துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேட்டி