in

தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டும் துணைநிலை ஆளுநர்


Watch – YouTube Click

தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டும் துணைநிலை ஆளுநர்

 

தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டும் துணைநிலை ஆளுநர் தமிழிசை திட்டக்குழு கூட்டத்தை கூட்டுவதிலும் காட்ட வேண்டும்…அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி..

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புக்கு முன்பாக இவ்வாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு எவ்வித பூர்வாங்க ஏற்பாடுகளையும் இதுவரை செய்யவில்லை. பல வருடங்களுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு 2023-ஜனவரி மாதம் 27-ம் தேதி திட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த ஆண்டிற்கான பட்ஜெட் தொகை முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இன்று வரை துணைநிலை ஆளுநர் தலைமையில் திட்டக் குழு கூட்டம் கூட்டப்படவில்லை.

தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டும் துணைநிலை ஆளுநர் தமிழிசை திட்டக்குழு கூட்டத்தை கூட்டுவதிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுச்சேரி மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிடும்.. அதற்கான பணியை முன்பே துவக்கி விட்டோம்.. அதற்கு சாட்டி தான் மாநில அந்துஸ்து கோரி அதிமுக நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி எனவும் அன்பழகன் கூறினார்…


Watch – YouTube Click

What do you think?

மாகே போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்

சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு