புதுச்சேரியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் 576 கோடி ரூபாய் செலவில் தலைமை செயலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சட்டமன்றம் கட்ட துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அடிக்கல் நாட்டு விழா தொடங்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்
இது தொடர்பாக சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்
புதுச்சேரியில் முந்தைய துணைநிலை ஆளுநரால் ஒன்றை ஆண்டு காலமாக புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான கோப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய ஆளுநர் கைலாஷநாதன் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி மத்திய உள்துறை அச்சகத்தின் அனுமதிக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு புதுச்சேரி அரசு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.576 கோடியில் தமிழ் சேலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றார்.
ஜிப்மர் மருத்துவமனையில் இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர்கள் சேர்ந்தது குறித்து ஆளுநரிடம் புகார் அளித்திருந்தோம் அந்த இடங்களை புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
புதிய துணைநிலை ஆளுநரும் தலைமை செயலரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் இதனால் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகாரம் மையமாக இருந்த புதுச்சேரி அரசு தற்போது இணக்கமான சூழலில் உள்ளது அடுத்த இரண்டு ஆண்டுக்கும் இந்த இணக்கமான சூழல் தொடரும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.