இந்தியன் 3 … படத்தை கைவிட்ட Lycaa
1996 ஆம் ஆண்டு ஷங்கர் கமலஹாசனை நாயகனாக வைத்து இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் இந்தியன்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகிய படுதோல்வியை அடைந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகம் வெளிவருமா என்ற ஐயம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது .
இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு முன்பே லைக்காவுக்கும் சங்கருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் ரெட் Gaint மூவிஸ் தலையிட்டு அப்பிடத்தை வெளியிட்டது.
இரண்டாம் பாகம் தயாரிக்கும் பொழுது மூன்றாம் பகுத்துக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்ட நிலையில் தற்போது ஒரே ஒரு பாடல் ஷூட்டிங் மட்டும் பாக்கி அப்பாடலை எடுக்க 20 கோடி ரூபாய் தேவைப்படுது ஆனால் லைகா அதற்கு சம்மதிக்கவில்லை ஏற்கனவே இந்தியன் 2 படத்தால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து லைக்கா வெளியேறி விட்டதால், மீண்டும் ரெட் லைட் மூவிஸ் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.
இந் நிலையில் அந்தப் பாடலை விட்டு விட்டு படத்தை முடிக்கும்படி சங்கரிடம் கூறியிருக்கிறாராம் உதயநிதி. அதற்கான வேலையில் இறங்கி இருக்கும் ஷங்கர் விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நிச்சயம் இந்தியன் 3 படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி இருக்கும் என்ற நம்பிக்கையை கமல் ஏற்கனவே கொடுத்திருக்கிறார். நம்பூவோம்…