in

ரஜினி..இக்கு செக் வைத்த Lycaa’

ரஜினி..இக்கு செக் வைத்த Lycaa’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியான வேட்டையான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது.

டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.200 கோடி வசூல் செய்து ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது., வெற்றியைக் கொண்டாடுவதற்காக வேட்டையன் படக்குழு சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்தது.

அக்டோபர் 3 ஆம் தேதி இதய நோய் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட முதல் சந்திப்பு இது. வேட்டையனின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளது.

படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநில விநியோகஸ்தர்கள் கூடுதல் திரைகளைக் கோரியுள்ளனர் என்று கூறியது.அடுத்தடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்த லைக்கா தற்பொழுது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது.

வேட்டையன் சக்சஸ்…சை கொண்டாட ரஜினி வீட்டுக்கு சுபாஷ் சந்திரன் சென்று இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருவரும் உரையாடி இருக்கிறார்கள். அதாவது வேட்டையன் சக்சஸ் தொடர்ந்து தனது புரொடக்ஷனில் இன்னொரு படம் ரஜினி நடிக்க என்று Lycaa கேட்டிருக்கிறது.

ஆனால் ரஜினி தற்போது கூலி படத்திலும் ஹிந்தி மற்றும் ஹரி கணேசனுடன் இணைந்து ஒரு படமும் பண்ணுவதாக இருக்கிறார். ஆனால் லைக்கா திடீரென்று இன்னொரு படம் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ரஜினிகாந்த் மறுக்கமுடியாத சூழ்நிலை ஏனென்றால் இதுவரை Lycaa Production…னில் ரஜினி நடித்த எல்லா படமும் தனக்கு நஷ்டம்.

முதல் முறையாக வேட்டையன் படத்தால் நஷ்டம் ஏற்படவில்லை, இவருடைய மகள் ஐஸ்வர்யா எடுத்த லால் சலாம் படுதோல்வி அடைந்த நிலையில் இந்த நஷ்டத்தை சரி கட்ட தனது தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினிக்கு லைக்கா செக் வைத்து இருக்கிறது.

What do you think?

நாமக்கல்லில் புரட்டாசி பெளர்ணமி பிரித்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம்