lycaa தலையில் துண்டை போட்ட சங்கர் …இந்தியன் 2 movie review
இயக்கம்: சங்கர்
தயாரிப்பு: lycaa
இசை: அனிருத்
Cinematography: Ravi Varman
சங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் கடந்த பாரம் 12-ஆம் தேதி இந்தியன் 2 வெளியானது. 250 கோடி பட்ஜெட்டில் உருவான படம் வசூல் ரீதியிலும் விமர்சனம் ரீதியிலும் எப்படி இருக்குது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நண்பர்களான (சித்தார்த்), (ஜெகன்), (பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர் சமூகத்தில் நடக்கும் ஊழல், அவலங்கள் போன்றவற்றை வீடியோகளாக எடுத்து, தங்களது ‘பார்கிங் டாக்ஸ் (BARKING DOGS ‘ என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்கள் லஞ்சம் மற்றும் ஊழல்கள் அதிகமாகவே நண்பர்கள் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று come back Indian என்று hastag வலைதளத்தில் போட அது வைரலாகி, தைவானில் வர்மக்கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வரும் இந்தியன் தாத்தா இத்தகவல் பார்த்து இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார்.
சேனாபதியான ‘இந்தியன்’, லஞ்சத்தை, ஒழித்தார அல்லது இந்தியன் தாத்தாவை ஓடவிட்டார்களா என்பது தான் மீதி கதை .ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இந்தியனை அப்படியே விட்டிருக்கலாம் part2 ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள். இந்தியன் வை எடுத்தே ஆக வேண்டும் என்று வலுக்கட்டாயமாக படம் எடுத்து சுட்டுக் கொண்டார் இயக்குனர் சங்கர் .இது சங்கர் படம் தானா.என்று கேள்வி கேட்கும் அளவிற்கு படுமோசமாக படத்தை எடுத்திருக்கிறார். கமலஹாசன் இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் மோசமாக ஷங்கர். கமலஹாசனை இயக்கியிருக்கிஇருக்கிறரா அல்லது நடிக்க விடவில்லையா என்ற கேள்வி எழும்புகிறது
உலக நாயகனுக்கு நடிக்க சந்தர்ப்பம் கொடுக்காமல் மோசம் செய்து விட்டார் இயக்குனர் உயிரோட்டமே இல்லாத ஒரு கதையோடு பயணிக்கிறது இந்தியன் 2 பிரியா பானு,சித்தார்த், ragul ப்ரீத்தி சிங் போன்ற நடிகர்கள் சங்கர் படம் என்ற பயபக்தியுடன் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லி கொள்ளலாம். பாட்டு எதுவும் சொல்லிக் கொள்ளும்படியில் இல்லை என்றாலும் ஒரு பாடலை மட்டும் ஓகே சொல்லலாம் ஆனால் சங்கர் தன் பாணியில் அந்த பாடலையும் மாடுகளை லைனாக நிற்க வைத்து கலர் அடித்து சுதப்பிவிட்டார் வழக்கம் போல் ஒரு ஊரையே குத்தகை எடுத்து கலர் பெயிண்ட் அடித்து பிரம்மாண்டமாக பாடல் எடுத்திருக்கிறார்.
இந்தியன் படத்தில் ஏ ஆர் ரகுமான் போட்ட இசைக்கு முன்னால் அனிருத் இசை சொல்லிக் கொள்ளும்படி விறுவிறுப்பு இல்லாமல் நகர்ந்து செல்லும் கதை கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் கமல் நடித்திருக்கிறார் என்று கூற வேண்டும் இரண்டாம் பாகத்தில் சங்கர் சொதப்பியதால் அடுத்த படத்தின் மேல் விறுவிறுப்பும் ஆர்வமும் ரசிகர்களுக்கு ஏற்பட வில்லை .மற்றபடி தேவை இல்லாமல் பிரம்மாண்டம் என்ற பெயரில் ஒரு சில காட்சிகளுக்கு மனசாட்சி இல்லாமல் ஷங்கர் செலவு செய்திருக்கிறார் .
களத்தூர் கண்ணம்மாவில் கூட கமல் தன் முக பாவனையால் எல்லாரையும் உருக வைத்து விட்டார் ஆனால் ஒரு மகா நடிகனை ஷங்கர் இந்த படத்தில் வீணடித்து விட்டார் .மொத்தத்தில் இந்தியன் 2 சொதப்பல் . நடிப்பு அரக்கன் s.j. சூர்யாவை மனசாட்சி இல்லாமல் வேஸ்ட் செய்திருக்கிறார். இந்தியன் 2 வசூலை நம்பி தான் லிக்கா விடாமுயற்சின் இறுதி படபிடிப்பு இருக்கும் நிலையில். லைக்கா தலையில் துண்டை போட்டு விட்டார் போதா குறைக்கு ப்ரோமோஷனுக்கு என்று அதிக பணம் செலவு செய்திருக்கிறது lycaa . விமர்சனத்தை பார்த்து முன்றாம் பாகத்தை சங்கர் தெத்துனா… lycaa தலை தப்பும்…மா?