in

எதிர்நீச்சல் 2 விரைவில் அப்டேட் கொடுத்த மதுமிதா


Watch – YouTube Click

எதிர்நீச்சல் 2 விரைவில் அப்டேட் கொடுத்த மதுமிதா

அதிகம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட இந்த சீரியல் குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து அவர்கள் மறைந்த பிறகு கதையின் ஓட்டமே திசை மாறியதால் ரசிகர்களுக்கு அந்த சீரியலின் மேல் ஆர்வம் குறைந்து விட்டது.

எதிர்நீச்சல் சீரியல் கதையை மாற்றும் படி கலாநிதி மாறன் கேட்டபோதும் திருச்செல்வம் அவர் போக்கிலேயே கதையை நகர்த்தி சென்றதால் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பல விமர்சனங்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் உள்ளானதால் அவசர அவசரமாக சீரியலை முடித்து திருச்செல்வம் விரைவில் எதிர்நீச்சல் 2 வரும் என்று கூறியிருந்தார்.

கலாநிதி மாறனும் திருச்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுதும் பிடி கொடுக்காமல் இருந்த திருச்செல்வம் தற்பொழுது சம்மதித்து இருக்கிறாராம்.

அதனால் சூட்டிங்காக எடுத்த வீட்டை இன்னமும் காலி செய்யாமல் வாடகை கொடுத்து வருகிறதாம் சன் தரப்பு.

ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடித்த மதுமிதாவிடம் உங்களின் Bold…டான கேரக்டர் எங்களுக்கு பிடித்திருக்கிறது அப்படிப்பட்ட கேரக்டரில் உங்களை மீண்டும் பார்க்க முடியுமா என்று கேட்க மதுமிதாவும் நிச்சயம் முடியும் உங்கள் நம்பிக்கை வீண் போகாது விரைவில் எதிர்நீச்சல் 2 …வில் மொத்த டீமும் உங்களை சந்திப்போம் என்று எதிர்நீச்சல் 2 பற்றி அப்டேட் கொடுத்திருக்கிறார்.

அதனால் விரைவில் சன் டிவியில் எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கலாம்..


Watch – YouTube Click

What do you think?

நான்காவது முறையாக ஆபரேஷன்… போராட்டமான வாழ்க்கை தீர்வு கிடைக்குமா? டிடி கண்ணீர்

13 வருடங்களாக காதலித்த பெண்னை திருமணம் செய்த சீரியல் நடிகர் அவினாஷ்