in

மதுரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

மதுரை மேல பேட்டை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு மகாலட்சுமி ஹோமம் திருமுறை பாராயணம் நவக்கிரக ஹோமம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்ற பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாலை ஐந்து மணிக்கு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை முதல் காலையாக வேள்வி மற்றும் பூர்ணாஹுதியுடன் தீபாரதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து.

இன்று காலை ஏழு மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை யுடன் தொடங்கி மகா பூர்ணாஹுதி காட்டப்பட்டு காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடாகி விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பத்திரகாளி அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

What do you think?

காட்டேரிக்குப்பம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமித ஸ்ரீ சுப்பிரமணி ஆலய திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாதி விழா

மத நல்லிணக்கம் விரும்புவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். – எச்.ராஜா பரபரப்பு பேட்டி