in ,

மதுரை அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில் -122 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

மதுரை அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில் -122 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

 

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மதுரை அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில் -122 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த அம்மனை வணங்கிச் சென்ற பக்தர்கள்.

நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளான இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.

இங்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மாடக்குளம் பகுதியில் வீற்றிருந்து அருள்பாளிக்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் கோவில் 122ம் ஆண்டு நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிறப்பு பூஜைகள் தீபாராதனைகளுக்கு பிறகு பக்தர்களுக்கு விபூதி மற்றும் குங்குமப்பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் பெண்கள் குலவை இட்டும் பக்தர்கள் மனம் உருக அம்மனை வழங்கினர்.

தொடர்ந்து கோவில் நிர்வாகம் மூலம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை சுண்டல் என அம்மனின் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருந்து நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்மனை மனமுருக வணங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் ப்ரும் மோத்ஸவ கொடியேற்ற விழா நடைபெற்றது

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி மஹோத்சவ திருவிழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம்