in

மதுரை சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

மதுரை சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

 

மதுரை சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு இன்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு யாகபூஜை நடந்தது. திருவிழா கொடி ஏற்றக்கூடிய பொருட்களுடன் மேளதாளத்துடன் சோழவந்தான் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பூக்குழி திருவிழா கொடியேற்றத்தில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

நெல்லை – திருவழுதீஸ்வரர் திருக்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா