in

மதுரை தல்லாகுளம் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

மதுரை தல்லாகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை கலைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,12.10. 2023 அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா