76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தேசிய கொடி ஏற்றினார்
இந்திய நாட்டின் அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததை அடுத்து அன்றைய தினத்தில் ஆண்டு தோறும் குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
விழாவில், மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர், ஊழியர்கள் அதிகாரி, ரயில்வே துறை ஊழியர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.