நியோமேக்ஸ் வழக்கு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரையை தலைமை இடமாக கொண்டு தமிழக முழுவதும் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது நியோமேக்ஸ் நிறுவனம்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்ததின் பேரில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மூத்த குடிமக்கள் சார்பாக சங்கம் உள்ளது இந்த சங்கத்தில் 1926 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 1857 உறுப்பினர்கள் 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள்.
எங்கள் சங்க உறுப்பினர்கள்,எங்கள் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் சேமிப்புகள் மற்றும் சிலவற்றை நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
எங்கள் சங்க உறுப்பினர்கள் 1000 பேர், சராசரியாக ரூ.1500 முதல் 2000 கோடி வரை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நிதி நிறுவனத்திற்கு மோசடியில் சிக்கி உள்ளதாகவும், முதலீட்டாளர்கள் பணம் வரவில்லை. இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மோசடிக்கு பிறகு அதிர்ச்சியில் மனுதாரர் சங்கத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
எனவே முதல் கட்டமாக நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மூத்த குடி மக்கள் உறுப்பினர்கள் செய்த முதலீடு தொடர்பாக, விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து முன்றுரிமை அடிப்படையில் முதலீடு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.