மதுரை கூடல் நகர் திருக்கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கூடலழகர் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது
இன்று தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த வைகாசி பெருந்திரு விழாவில்
ஒவ்வொரு நாளும் வியூக சுந்தர்ராஜ பெருமாள் விசேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் , குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருள உள்ள நிலையில் ஒன்பதாம் நாள் நிகழ்வாக 24ம் தேதி திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது அன்றைய தினம் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்க வியூவ சுந்தர்ராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
29ம் தேதி உற்சவ சாந்தி அலங்கார திருமஞ்சனத்தோடு வைகாசி பெருந்திருவிழா நிறைவடைகிறது
முதல் நாள் நிகழ்வாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் விசேஷ பூஜைகள் கொடி மரத்துக்கு சாற்றப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என கோஷம் முழங்க மனமுருக பெருமாளை வணங்கினர்