in

திமிதி திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த திரௌபதி அம்மன்

திமிதி திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த திரௌபதி அம்மன்

 

திருவாவடுதுறையில் நடைபெற்ற திமிதி திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த திரௌபதி அம்மன்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை மந்தவெளியில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விஷ்மர் பிறப்பு, தர்ம பிரபு,கிருஷ்ணர் பிறப்பு, உள்ளிட்ட பல்வேறு மகாபாரத சொற்பொழிவு நாடகங்கள் நடைபெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் திருவாவடுதுறை காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகமானது புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க
முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு ரசித்தனர்.

What do you think?

விநாயகர் சிலைகள் தாரை தம்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காவிரியில் விசர்ஜனம்

திருநள்ளாறில் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்