in ,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா மீனாட்சியம்மன் சித்தர் கோல அலங்காரம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா மீனாட்சியம்மன் சித்தர் கோல அலங்காரம்

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா; 7 ஆம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் சித்தர் கோல அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 3ஆம தொடங்கி வரும் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

அதன்படி விழாவின் 7 ஆம் நாளான இன்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சித்தர் கோல அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. .

நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையிலான அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.

நவராத்திரி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்ட கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர்.

இதேபோன்று சித்தர் கோல அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனம்

தேவேந்திரகுல சங்கம் சார்பில் மரியாதை