in

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா

 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா – புதுமண்டபத்தில் சுந்தேரசுவரர், மீனாட்சியம்மனுக்கும் புது மண்டபத்தில் சிறப்பு பூஜை – சித்திரை வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

அம்மன் சன்னதி வீதியில் உள்ள கைலாசா மடத்தின் முன்பாக சுவாமி அம்மனுக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு.

புதுமண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் வைகாசி மாதத்தை முன்னிட்டு நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ள இவ்விழாவின் முதல் நாள் நிகழ்வாக கோவிலில் இருந்து சுந்தேரசுவரர் பிரியாவிடை சமேதராகவும், மினாட்சியம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளியபடி பஞ்ச மூர்த்திகள் முன்னே வர அம்மன் சன்னதி வீதி வழியாக புதுமண்டபத்திற்கு புறப்பாடாகினர்.

அப்போது அம்மன் சன்னதி வீதியில் அமைந்துள்ள நித்யானந்தாவின் கைலாசா மடத்தின் முன்பாக அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கைலாசா மட பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக அம்மன் சன்னதியில் அம்மனும் சுவாமியும் சிம்மாசனத்தில் வந்தபோது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து புதுமண்டபத்திற்கு வந்தடைந்த சுவாமிக்கும் அம்மனுக்கும் வரவேற்பு அளிக்கும் விதமாக கோவில் கண்காணிப்பாளர் மற்றும் கணக்காளர் சுவாமி அம்மன் முன்பாக வணங்கி வரவேற்கும் வைபவம் நடத்தப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் புது மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 3 முறை வலம்வந்தனர். அப்போது புதுமண்டபத்தில் சுற்றி நின்று ஏரளாமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புது மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. அப்போது வீணை வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான வீணை இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்மனையும் வரவேற்று வழிபாடு செய்யும் விதமாக வீணை இசை வாசித்தனர்.

வைகாசி வசந்த உற்சவ விழாவினை முன்னிட்டு புதுமண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கரின் சிலைக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் புதுமண்டபத்தில் இருந்து பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமியும் அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது சித்திரை வீதிகளில் ஏராளமான பக்தர்கள் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.

வசந்த உற்சவம் விழாவினை முன்னிட்டு இன்று தொடங்கி 10 நாட்கள் வரை திருக்கோயில் சாா்பாக உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்பது குறிப்பிடதக்கது.

What do you think?

மதுரை சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை கருங்குயில்பேட்டை – ஸ்ரீ ஐயனார் ஆலயம் மகாகும்பாபிஷேகம்