மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
மதுரை பொன்முடியார் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி அசத்திய மாணவிகள் – உற்சாகத்துடன் கைதட்டி அமர்ந்தவாறு ஆட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவிகள்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கு மேற்பட்ட மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது தலைமையாசிரியை தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டு விழாவில் ஏராளமான பள்ளி மாணவிகள் பரதநாட்டியம், ஆடல் பாடல் என தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் ஆடிய முன்னாள் மாணவியினர் நடனம் அனைவரையும் வியக்கவைத்தது.
பாடல்களுக்கு ஏற்ப மாணவிகள் உற்சாகமாக நடனமாடியதை பார்த்த மாணவிகள் கைதட்டி ஆர்ப்பரித்து உற்சாகமடைந்து கொண்டாடினர்.
மேலும் கடந்த ஆண்டு 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரொக்க தொகை பரிசு வழங்கப்பட்டது.
மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதை, ஏராளமான ஆசிரியர்களும் மாணவிகளின் பெற்றோர்களும் கண்டுகளித்தனர்.
தனியார் பள்ளியை போல மாநகராட்சி பள்ளியிலும் பள்ளி ஆண்டுவிழா விமர்சையாக நடைபெற்றது மாணவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.