in

மதுரை தே. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமை வலுப்படுத்தும் வகையில் முத்தாலம்மன் கோவில் சப்பர திருவிழா

மதுரை டி.கல்லுப்பட்டியில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் சப்பர திருவிழாவில் லட்சக்கணக்கானேர் பங்கேற்பு..!!

மதுரை தே. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் முத்தாலம்மன் கோவில் சப்பர திருவிழா நடைபெற்றது

இந்த திருவிழா கொட்டுவதற்கான காரணம் ஆந்திராவிலிருந்து மூதாட்டி தனது ஆறு பெண் குழந்தையுடன் டி. கல்லுப்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அவர்களை டி.கல்லுப்பட்டி ஊர் மக்கள் உணவளித்து தங்க இடம் கொடுத்துள்ளனர்.அவர்கள் வந்த பின்னர் தான் டி.கல்லுப்பட்டி யைச் சுற்றி நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்தது. இதனால் கல்லுப்பட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் 7 பேர் மீதும் மிகுந்த அன்பு தொடர்ந்து வர்கள் தொய்வமா மாறியதாக கூறப்படுகிறது

இந்த 6 தெய்வத்தையும் அதாவது கல்லுப்பட்டி சுற்றுவட்ட பகுதியான தேவன் குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும், டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதியாகவும், வன்னிவேலாம்பட்டியில் மகாலட்சுமியாகவும்,அம்மா பட்டியில் பைரவியாகவும் காடனேரியில் திரிபுரசுந்தரி யாகவும்,கிளான்குளத்தில் சபரியாகவும், சத்திரப்பட்டியில் சௌபாக்கியவதியாகவும் ஏழு கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழா முத்தாலம்மன் சப்பரத் திருவிழா என்று கொண்டாடப்பட்டு
வருகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரம் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மாபட்டியை தவிர்த்து பிற ஆறு கிராமத்தினரும் தங்களுடைய சப்பரங்களை தலைச் சுமையாகவே இரண்டு கிலோமீட்டர்கள் தூக்கிவந்து அம்மாபட்டி கிராமத்தை அடைந்தனர்.

அம்மாபட்டி கிராமத்தில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் 6 கிராமத்தினரும் தங்கள் அம்மன்களை பெற்றுக் கொண்டு ச்பரம் அவரவர் கிராமத்திற்கு திரும்பினார்கள்.

பல ஊர்களில் சப்பரங்கள் கொண்டு அவர்கள் கிரமத்திற்கு திரும்பினார்கள். பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர்கள்வடம்பிடித்து அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு கொண்டு வருவார்கள். ஆனால் இப்பகுதியில் மட்டுமே கிராம மக்கள் சப்பரங்களை தங்கள் தலைச் சுமையாகவே தூக்கி வருவது சிறப்பாகும்.

பின்னர் மாவிளக்கு பூஜை முளைப்பாரி மற்றும் அம்மனுக்கு பூஜை நடைபெற்றது. பல்வேறு சமூகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒற்றுமையை திருவிழாவின் மூலம் வெளிப்படுத்தினார்கள். திருவிழாவை முன்னிட்டு மதுரை ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் டிஎஸ்பி தலைமையில் 500 போலீசார்கள் செய்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஏழு கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

What do you think?

வெள்ளி விழா கண்ட தமிழகத்தின் முதல் உழவர் சந்தை