in

மதுரை டூ மலேசியா சென்னை வழியாக விமான சேவை நாளை முதல் தொடக்கம்

மதுரை டூ மலேசியா சென்னை வழியாக விமான சேவை நாளை முதல் தொடக்கம்

 

மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் 24 மணி நேரம் சேவை-முதல்முறையாக மதுரை டூ மலேசியா சென்னை வழியாக விமான சேவை நாளை முதல் தொடக்கம்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை வழி மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை நாளை 21 தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சேவையை துவங்குகிறது.

மதுரையில் இருந்து இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என மத்திய விமான அமைச்சகம் அறிவித்ததை அடுத்து.

இன்று முதல் மதுரை – சென்னை, சென்னை – மதுரைக்கு இரவு நேர விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் முதல்முறையாக மதுரையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலம் செல்வதற்கான விமான சேவையை நாளை 21 ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.

மதுரையிலிருந்து இரவு 9:05 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கு செல்கிறது. மறு மார்க்கத்தில் மலேசிய நேரப்படி காலை 9:30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

டில்லி, கோல்கட்டாவில் இருந்து வரும் விமானங்களுடன் பினாங்கு விமானம் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற நகரங்களில் இருந்து வரும் பயணிகள் சென்னை, மதுரைக்கு இணைப்பு விமானமாக இந்த பினாங்கு விமானத்தை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மதுரையிலிருந்து பினாங்கிற்கு நேரடி விமான டிக்கெட் வழங்கப்படுவதோடு பயணிகளின் உடைமைகளை நேரடியாக பினாங்கிற்கு அனுப்பும் வசதியும் கிடைக்கும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆதாரத்தின்படி, மதுரையில் இருந்து பினாங்குக்கு நேரடி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஒரே PNR உடன் இரண்டு விமானங்களில் பயணம் செய்வார்கள். அவர்கள் 30 கிலோ செக்-இன் சாமான்களையும், 7 கிலோ கேபின் லக்கேஜையும் எடுத்துச் செல்லலாம்.

தென் மாவட்ட மக்கள் குறிப்பாக சிவகங்கையின் காரைக்குடி செட்டிநாட்டு பகுதியைச் சேர்ந்த பலர் பினாங்கில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை – பினாங்கு விமான சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

What do you think?

விருதை தட்டி சென்ற அமரன்

திண்டுக்கல் அருகே ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்