in

சீர்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா சண்டி ஹோமம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

சீர்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகா சண்டி ஹோமம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை அருள்பாலிக்கும் சக்தி சொரூபமான இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்து செல்கின்றனர்.கோயிலில் ஆடி கடை வெள்ளியில் நடைபெறும் தீமிதி திருவிழாவின் போது 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பது வழக்கம்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் மகா சண்டி ஹோமம் நடந்தது. முன்னதாக வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க ஹோமம் செய்யப்பட்டு ஹோம குண்டத்தில் பல்வேறு வகையான வேதிகை பொருட்கள் இடப்பட்டு மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கம், வெள்ளி, பட்டு வஸ்திரங்கள் இட்டு பூர்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாரதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

What do you think?

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை

சோசியல் மீடியாவில் வெளிச்சம் போட்டு காட்டுவேன் ரக்ஷிதா…வை மிரட்டிய தயாரிப்பாளர்