தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற முண்டக்கண்ணிஅம்மன், மாசாணி அம்மன் கோவிலில் உலக மக்கள் நலம்பெற, விவசாயம் செழிக்க மழை பெய்திட மஹா சண்டியாகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமாகும் இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று விஜயதசமியை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி, விவசாயம் செழிக்க மழை பெய்திட, மஹா சண்டி யாகம் நடைபெற்றதை முன்னிட்டு கணபதி பூஜை, கோபூஜையுடன், விக்னேஷர பூஜையுடன் தொடர்ந்து யாகம் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 5 டன் விறகு, பழங்கள், வஸ்திரங்கள், காய்கறிகள், மற்றும் பல்வேறு வகையாக முலிகை பொருட்கள் கொண்டு யாகம் நடத்தினார் பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகி பாலீஸ்வரன்ரேவதி தலைமையில், நிர்வாகிகள் பக்தர்கள் செய்து இருந்தனர்