புவனகிரி ஸ்ரீ வெள்ளியம்பலம் ஆலயத்தில் மஹா கால பைரவர் அஷ்டமி பூஜை விமர்சையாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஸ்ரீ வெள்ளியம்பலம் ஆலயத்தில் மஹா கால பைரவர் அஷ்டமி பூஜை விமர்சையாக நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித நீர் கலசம் யாகசாலையில் பல்வேறு பூஜையில் பூஜிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் புனித நீர் கலசம் கோவிலை சுற்றி வலம் வந்து பைரவர் மீது ஊற்றப்பட்டது முன்னதாக பைரவருக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இதனை தொடர்ந்து விசேஷ அலங்காரத்துடன் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டு சென்றனர்.