in ,

ஆலகிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய சம்ப்ரோக்ஷனம் என்னும் மஹா கும்பாபிஷே விழா

ஆலகிராமம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய சம்ப்ரோக்ஷனம் என்னும் மஹா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆலகிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மங்கல இசை உடன் தொடங்கப்பட்டு கோ பூஜை,விஸ்வரூப தரிசனம், நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்துயாகசாலையில் பல்வேறு வகையான திரவியங்கள் வாசனைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் நவதானிய பொருட்கள் தேன் பன்னீர் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து பூர்ணாசெலுத்தி யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு பஞ்ச முக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

மேலும் காலை 9. 15 மணியளவில் கும்பங்கள் புறப்பட்டு ஆலய கருவறை விமான கோபுரத்தை வந்தடைந்தது. மேலும் விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 9:30 மணி அளவில் சிம்ம லக்னத்தில் கருவறை விமானம் மற்றும் கொடி மரத்திற்கு துஜஸ்த்தம்பம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து மகா கணபதி, ஸ்ரீ கிருஷ்ணன் போத்ராஜா, முத்தால் ராவுத்தர், நாகராஜன் ஆகிய பரிவார மூர்த்தி களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய விழா குழுவினர் செய்தனர்.

What do you think?

ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திண்டிவனம் அடுத்த பாதிரி கல்லங்குப்பம் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா