in

காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு நகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு நகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

 

காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள அருள்மிகு நகரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா கோபூஜை மற்றும் கணபதி பூஜைகளுடன் தொடங்கியது..

தேசமெல்லாம் புகழ்ந்தாடும் நகர் ஏழு அவற்றுள் காஞ்சி மாநகரம் ஒன்றாகும். இம்மாநகரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஐந்து மற்றும் புராண சிறப்புடைய சிவாலயங்கள் அமைந்துள்ளன. மட்டுமல்லாமல் கோயில் நகரம் நகரேஷ் காஞ்சி என பல சிறப்புகளைப் பெற்றள்ளது.

கட்சி பல தனியும் ஏகம்பத்தும் கைலாய நாதனே காணலாம் என்று அப்பர் அருள்வாக்கின்படி விளங்கக்கூடிய காஞ்சிபுரம் கீழண்ட ராஜ வீதியில் அமைந்துள்ளது அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில்.

இத்திரு கோயில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2009இல் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது 15 வருடங்களுக்குப் பிறகு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் ஐயப்ப பக்த ஜன சபா மண்டலம் சார்பில் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதன் முதல் நிகழ்வாக இன்று காலை திருக்கோயில் கோபுர வாசலில் கோ பூஜையும் அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது.

கோ பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள் குங்குமம் மற்றும் மாலைகள் மற்றும் பிரசாதங்கள் அளித்து பூஜையில் வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரபாக குருக்கள் மற்றும் காமேஸ்வர குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேக கணபதி ஓமம் துவங்கியது.

இன்று மாலை வாஸ்து சாந்தி பிரவேச பலி உள்ளிட்டவைகள் நடைபெற்று நான்கு கால பூஜை நிறைவிற்கு பின் வரும் திங்கட்கிழமை விடியற்காலை 4:50க்கு மகாபூர்ணாகதி நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து விநாயகர், நகரீஸ்வரர், ஐயப்ப சாஸ்தா, முருகன் , பெருமாள் ஆகிய ஐந்து கலச புறப்பாடுகள் நடைபெற்ற காலை 5 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஐந்து இருபத்தைந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார கும்பாபிஷேகங்கள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வஜ்ரவேலு மற்றும் ஐயப்ப பக்தஜனை சபா மண்டலம் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

What do you think?

காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா, திரு சந்தனக்கூடு உற்சவ திருவிழா

Hansika Released House Warming Photos