ஸ்ரீமுஷ்ணம் அருகே பிரசித்தி பெற்ற கானூர் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேத்திற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த பணிகள் முடிவுற்றபின் கும்பாபிஷேகம் நடத்திட கிராம மக்களால் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ செல்லியம்மனுக்கான கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 48 இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய நீரானது யாகசாலையில் புனித நீர் கலசங்களில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
முதல் மற்றும் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதன் நிறைவாக கடமானது சிவாச்சாரியார்கள் மூலம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டு பின்னர் பல்வேறு மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் இதனை தொடர்ந்து மகா தீபாரதனை காட்டப்பட்டு மூலவர் வழிபாடும் நடைபெற்றன.
இந்த கும்பாபிஷேக விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகம் தரிசனம் செய்து, மூலவரை வழங்கியும் சென்றனர்.