விக்கிரமங்கலம் அருகே நடு முதலைக்குளம் ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நடு முதலைக்குளம் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள பல்லாக்கு ஒச்சாத்தேவர் இரண்டு தேவர் வகையறாக்கள் இளைய வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட ஒச்சாண்டம்மன் கோயில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் தியாகராஜ சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக பூஜை நடத்தினர். காலை 9 மணி அளவில் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களைஎடுத்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து விநாயகர், ஆங்காளஅய்யன், மாங்கன்னி, பூங்கண்ணி, ஒச்சாண்டம்மன், கருப்புசாமி, சின்னச்சாமி ஆகிய ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உட்பட5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்