மரக்காணம் அருகே செல்வ முத்துமாரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
மரக்காணம் அருகே செய்யாங்குப்பம் காட்டு கொள்ளை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற செல்வ முத்துமாரியம்மன் கோயில். இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 9 தேதி காப்பு கட்டுதல் கணபதி பூஜை நவக்கிரக பூஜை சக்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக சிறப்பு பூஜைகளுடன் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் செய்தனர். இந்நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் கோ பூஜை, சந்தான பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கலசம் புறப்பாடு நிகழ்ச்சிகள்லுடன் வான வேடிக்கைகள் மங்கல இசை நிகழ்ச்சிகளுடன் வேத விற்பனர்களின் திருவேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மரக்காணம் புதுவை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.