திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா – 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் திராளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம்*
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த கோவில் தூண்டுகை விநாயகர் கோவில்.
முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் இங்கு வந்து வணங்கி தேங்காய் உடைத்து விட்டு அதன் பிறகு தான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த தூண்டுகை விநாயகர் கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கு பிறகு இன்று கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு 18 ஆம் தேதி முதலாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலையில் நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்கியதை தொடர்ந்து மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பாத்திர பூஜை, மஹா கணபதி ஹோமம், ப்ரம்மசாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்சியாக காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 9.15 மணிக்கு தூண்டுகை விநாயகர் கோவில் விமானத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தூண்டுகை விநாயகர் மூலஸ்தானத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கூடியிருந்த திரளான பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்க பட்டது அதன்பின்னர் மகா அபிஷேக தீபாரதனையும் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய கும்பாபிஷேகமானது சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் முருகன் கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.