in

கோனூர் ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட 5 பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம்

கோனூர் ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட 5 பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம்

 

பாபநாசம் அருகே கோனூரில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட 5 பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம்.. ..

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கோனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயனார், உள்ளிட்டம் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்று மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ சித்தி விநாயகர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோனூர் கிராமவாசிகள், நாட்டாமைகள் செய்திருந்தனர்.

What do you think?

நடிகை சௌந்தர்யா…வை திட்டம்மிட்டு கொலை செய்திருகிறார்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்