in

புவனகிரி குறியாமங்கலம் ஸ்ரீ சிவந்தநாயகி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

புவனகிரி குறியாமங்கலம் ஸ்ரீ சிவந்தநாயகி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

 

புவனகிரி அருகே குறியாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவந்தநாயகி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே குறியாமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவந்தநாயகி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம் நான்கு கால யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கடங்கள் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி வலம் வந்து புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 

மேலும் பொதுமக்கள் மீது புனித நீர் ட்ரோன் மூலம் தெளிக்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

திருத்துறைப்பூண்டி அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

புவனகிரியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய  கும்பாபிஷேகம்