திருத்துறைப்பூண்டி அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி அருகே அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது…
இன்று யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.